வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா வெட்டிவேர்...?

வெட்டிவேர் எண்ணெய் காயங்களில் தடவுவதன் மூலம் பாக்டீரியா மற்றும் நுண் கிருமிகளை செயலிழக்க செய்கின்றன. வெட்டிவேர் எண்ணெய் வெளியுறுப்புகள் மற்றும் உள்ளுறுப்புகள் இரண்டிலும் காயங்களை குணமாக்குகின்றன.

உடலுக்கு வெட்டிவேர் டானிக் கொடுப்பதால் உடலின் எல்லா செயல்பாடுகளையும் சீரமைக்கிறது. செரிமானம், சுவாசம், நோயெதிர்ப்பு, நரம்பு, நாளமில்லா சுரப்பி, போன்ற எல்லா உறுப்புகளையும் சரிபடுத்துகிறது.
 
உடலுக்கு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிகரிக்கிறது. பாக்டீரியாக்களால் ஏற்படும் சரும தொந்தரவுகளை போக்கி, வெள்ளை அணுக்கள்  மற்றும் தட்டுகள் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
 
வெட்டி வேரை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் உடல் சோர்வும் உடல், வலியும் நீங்கும். இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். வயிற்றுப்புண்ணும் குணமடையும்.
 
வாத நோய், கீல்வாதம், தசை வலி, சரும வறட்சி மற்றும் சரும வெடிப்பு போன்றவற்றையும் தடுப்பதற்கு வெட்டிவேர் எண்ணெய் உதவுகிறது.