இத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா அவுரி இலை....?

Updated: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (11:18 IST)
 
முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய் இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உல்ல  மூலிகை அவுரியின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்களால் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது.
 
பல்லில் உள்ள கிருமிக்கு, நீலியின் வேரைக் கடித்துத் துப்ப தீரும். கடைகளில் விற்கப்படும், நீலி பிருங்காதி தைலம், நீலின் யாதி கிருதம், நீலி காதி தைலம் ஆகியவற்றில், இதன் பயன்பாடு அதிகம். தீயால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க, அவுரி பயன்படும். 
 
வெளுத்த முடிக்கு இயற்கையாக கருப்பாக்க இந்த நீலி பயன்படும். அவுரி, மஞ்சள் கரிசாலை, வெள்ளைக் கரிசாலை, குப்பைமேனி, கொட்டைக்கரந்தை, செருப்படை ஆகியவற்றின் இலைகளை சம அளவாகச் சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள  வேண்டும்.
 
இதனை ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும். வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளும் விலகும். காலை, மாலை வேளைகளில், 45 நாட்கள் வரை தொடர்ச்சியாக சாப்பிடலாம்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments