செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2022 (14:05 IST)

உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகிறதா பொட்டுக்கடலை !!

Pottukadalai
பொட்டுக்கடலையை தேங்காயுடன் சேர்த்து சட்னியாக சாப்பிடுவது நம் உணவு வழக்கத்தில் இருக்கிறது. உடைத்த கடலையில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன.


உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.

நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உயரதிற்கு ஏற்ற உடல் எடையை பெற உதவுகிறது. உடல் பருமன் உள்ளவர்கள் பொட்டுக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை குறையும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

உடல் சீராக இயங்குவதற்கு நரம்புகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

உடைத்த கடலை பருப்பில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.