ஆயில் புல்லிங் ஏன் எப்படி செய்யவேண்டும் தெரியுமா...?

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:54 IST)
ஆயில் புல்லிங் பழங்கால ஆயுர்வேத முறை. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வாயில் வைத்து 20 நிமிடத்திற்கு கொப்பளிக்க வேண்டும்.


ஆயில் புல்லிங் செய்தால் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதும், பல் சம்மந்தமான பிரச்சனை மற்றுமின்றி பல உடல் தொடர்பான பிரச்சனைகளையும் போக்குகிறது.

ஆயில் புல்லிங் இரவு உணவுக்குப்பின் தூங்குவதற்கு முன் அல்லது காலையிலும் செய்யலாம். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 2 முதல் 3 ஸ்பூன்கள் வாயில் வைத்து 15 முதல் 20 நிமிடம் வரை வாயில் அனைத்து இடங்களில் படும்படியாக கொப்பளிக்க வேண்டும் . எண்ணெய் வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள்நிறம் ஆகும் வரை கொப்பளித்து திறந்த வெளியில் துப்பி விடவும்.

ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. காலையில்ஆயில் புல்லிங் செய்த ஒரு மணி நேரத்திற்கு பின்னரே காலை உணவு சாப்பிட வேண்டும்.

நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் சில, வாய்க்குள் தங்குவதாலும், புகைப்பழக்கத்தாலும் பிற சில காரணங்களாலும் வாய்க்குள் பாக்டீரியா தங்க வாய்ப்புகள் அதிகம். அவை வாய் துர்நாற்றம், சொத்தைப்பல், ஈறு வீக்கம் ஆகிய நோய்களுக்கு வழி வகிக்கிறது.

ஆயில் புல்லிங் செய்வதால் கெட்ட சுவாசத்தில் இருந்து விடுபடலாம். மேலும் ஆயில் புல்லிங் செய்பவர்களுக்கு எச்சில் சுத்தமாவதோடு வாய் ஆரோக்கியம் ஆகும்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments