Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக மருத்துவ குணங்களை கொண்ட கீரை எது தெரியுமா...?

Written By Sasikala
Updated: திங்கள், 23 நவம்பர் 2020 (12:16 IST)

இது குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், கணை சூடு, இருமல் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. மணத்தக்காளி வற்றலை நெய்யில் வறுத்து சாப்பிட நீர்க்கடுப்பு,  உட்சூடு ஆகியவை குணமாகும்.
 
மணத்தக்காளி கீரை இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மணத்தக்காளியை வாரம் இருமுறை அதிக காரம், புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
 
மணத்தக்காளி கீரையை நன்றாக மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும். சிவப்பு மணத்தக்காளி உடல் சோர்வு, வாய்வு கோளாறை நீக்கும்.
 
மணத்தக்காளி கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணம் உண்டு. மணத்தக்காளி கீரை கருப்பையில் வளரும் கரு வலிமை பெற உதவுகிறது.
 
மணத்தக்காளி கீரையானது இருதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். மணத்தக்காளியானது மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.
 
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது மணத்தக்காளி. மணத்தக்காளியின் வேரானது மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில்  சேர்க்கப்படுகிறது.
 
கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

எல்லாம் காட்டு

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments