புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (15:49 IST)

நாய் கடுகு செடியின் விதைகள் எதற்கு பயன்படுகிறது தெரியுமா....?

இந்த நாய் கடுகு செடியின் விதை, காய், பூக்கள், இலைகள், தண்டு, வேர் என்று அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது.

இந்த நாய் கடுகு சித்த வைத்தியம், யுனானி மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இது பல நோய்களை குணப்படுத்த பயன்படுகின்றது.
 
இந்த செடியில் ப்லேவனைடு, ப்லேனைடுஸ், டேர்பின், ஹைட்ரோகார்பன், பளிப்ளினைடுஸ் போன்ற பல நன்மை தரும் வேதி பொருட்கள் உள்ளன.
 
நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடு,  ஹெல்மாடிக் எதிர்ப்பு செயல்பாடு டயரியல் எதிர்ப்பு, கட்டி எதிர்ப்பு, எமெடிக் எதிர்ப்பு, ஹெபடோ பாதுகாப்பு போன்ற பண்புகளும் இதற்கு உள்ளது.
 
கல்லீரல் குறித்த அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்த இது ஏற்ற மருந்தாக (பலன்) உள்ளது, குறிப்பாக் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டு குறைகள் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது.
  
வயிற்றில் இருக்கும் கொக்கி புழு, மற்றும் நாடா புழுக்களை வெளியேற்ற இது உதவும். நரம்பு தளர்ச்சியை இது போக்க உதவும். ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.
 
வாந்தி மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். உடலில் உருவாகும் தேவையற்ற அணுக்களை வளர விடாமல் தடுக்கும்.
 
தூக்கமின்மை பிரச்சனையை போக்கி, நல்ல தூக்கத்தை பெற உதவும். காது வலி, மற்றும் காதில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க உதவும். அனைத்து சரும பிரச்சனைகளை போக்க இது உதவும்.