வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடல் எடையை குறைக்க உதவுகிறது தக்காளி என்பது தெரியுமா...!

தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.
தக்காளிப் பழத்தை ஜூஸாகவும், சாலட் ஆகவும், சூடாக சூப்பாகவும் கடைகளில் நம்மால் வாங்க முடியும். தென்னிந்திய உணவு வகைகள்  தக்காளி முதன்மை காய்கறி வகைகளில் ஒன்றாக இருக்கிறது. தென்னிந்திய உணவுகளில் தக்காளி சுவைக்காக சேர்க்கப்படுகிறது.
 
தக்காளியில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வர உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.  தக்காளியிலுள்ள அஸ்கார்பிக் அமிலம் செல் அழிவை தடுப்பதுடன் சுண்ணாம்பு சத்தை நிலைநிறுத்துகின்றன.
 
நன்கு பழுத்த தக்காளி இரண்டு எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் மற்றும் விதைகளை நீக்கிவிடுவது நல்லது.
 
கண்களுக்கு மிகவும் நல்லதான வைட்டமின் ஏ சத்தினை அதிக உணவுகளில் பெற முடியாது. அதேபோல் வைட்டமின் கே சத்தும் அரிதான  ஒன்று. இந்த வைட்டமின் இரத்தக் கசிவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
 
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க தக்காளி பெரிதும் உதவுகிறது. உங்களுடைய டயட்டில் தக்காளி இருந்தால் கண்டிப்பாக  உங்களால் உடல் எடையை குறைக்க முடியும். தக்காளியை தோல் மற்றும் விதையை நீக்கி சாறு தயாரித்து குடிப்பதால், அவை சிறுநீர்  கிருமித்தொற்றை நீக்குகிறது.
 
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள் தினமும் காலையில் இரண்டு தக்காளி பழங்களை எடுத்து சாறாக்கி தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறைவதை காணலாம். இதற்கு முக்கியமான காரணம் தக்காளியில்  மாவுச்சத்து குறைவாக இருப்பதே ஆகும். அதுமட்டுமல்லாமல் தக்காளியில் அதிக அளவில் வைட்டமின்களும் தாது உப்புக்களும்  அடங்கியுள்ளன. இதனால் நமக்கு உடல் நலக் குறைவு சோர்வு ஏற்படாமல் நம்மால் உடல் எடையை குறைக்க முடியும்
 
கோடைக்காலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைய தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வருவதால் தோல் மென்மையடைவதுடன்  குளிர்ச்சியும் உண்டாகும். சூரிய ஒளியினால் நமது சருமத்தில் ஏற்படுகின்ற மாற்றத்தை தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின்கள்  சரிசெய்கின்றன. அதுமட்டுமில்லாமல் தக்காளியில் உள்ள லைகோபீன் சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து நம்மை  காக்கின்றன.
 
தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண்பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது.
 
புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதுவும் சமைத்த  தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.