1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இத்தனை நோய்களுக்கு நிவாரணம் தரும் ஒரே மருந்து என்ன தெரியுமா...?

கருஞ்சீரகத்தில் உள்ள 'தைமோகியோனின்' என்ற வேதிப்பொருள், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால், கெட்ட கொழுப்பு குறையும். தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.  கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.
 
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு,  கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
 
கருஞ்சீரகத்தை வினிகரில் வேகவைத்து வாய் கொப்பளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும்  அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி நல்லெண்ணெய்யில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
 
சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும். கருஞ்சீரகத்தை நீர் விட்டு அரைத்து நல்லெண்ணெய் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவர்றில் பூசி வர குணம் தெரியும்.
 
கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும். தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை  சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். 
 
கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத்  தவிர்க்கலாம்.