Daily Horoscope
✕

கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா...?

Written By Sasikala
Updated: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (14:49 IST)

கொய்யா நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
 
தினமும் 2 கொய்யா பழங்கள் சாப்பிட்டு வந்தால், அது நம் உடலின் தேவையில்லாத கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
 
சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் கொய்யா பழம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
விட்டமின் C சத்துக்களை, கொய்யா பழம் அதிகமாக கொண்டுள்ளதால், விட்டமின் C மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள், இந்த கொய்யா பழத்தினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
 
கொய்யா பழத்தில் உள்ள விட்டமின் A, சளித்தொல்லை மற்றும் குடல் தொடர்புடைய குறைகளை சரிசெய்து, பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது. கொய்யா பழம் சாப்பிடுவதால், அது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து, பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
 
கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கொய்யாப்பழத்தை  சாப்பிடும் போது, வெட்டிச் சாப்பிடுவதை விட கடித்துச் சாப்பிடுவதால், அதனுடைய முழுமையான பலனை பெறலாம்.

எல்லாம் காட்டு

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments