செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (09:50 IST)

அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் என்ன தெரியுமா...?

அன்னாசிப்பழம் பலவகையான வைட்டமின்கள் குறிப்பாக வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் புரோமைலின் போன்ற நொதிகளைக் கொண்டிருக்கின்றன, இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


அன்னாசிப்பழத்தில் புரொமைலின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் சுவாச நோய்களை தடுக்கவும். சுவாசக் குழாய் அழற்சி, சைனஸ், சளி மற்றும் இருமலைக் குறைக்கவும் அன்னாசிப்பழம் உதவுகிறது.

அன்னாசிப்பழம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே அடிக்கடி அன்னாசிப்பழம் சாப்பிடுவது நல்லது.

அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரொமைலின் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. எனவே அன்னாசிப்பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.

அன்னாசிப்பழத்தில் மாங்கனீசு அதிகம் உள்ளது. எலும்புகள் மற்றும் இணைப்புத் திசுக்களை வலிமையாக்கும். அன்னாசிப்பழத்தில் வைட்டமின்கள் ஏ மற்றும் கே, பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் குறிப்பாக வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு நிறைந்தவை.

அன்னாசிப்பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் அதிக அளவு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளன. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப் பழத்தை சாப்பிடுவது நல்லது.