1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆலிவ் எண்ணெய்யில் உள்ள மருத்துவகுணங்கள் என்ன தெரியுமா....?

ஆலிவ் எண்ணெய்யில் நன்மை தரும் கொழுப்பு உள்ளது. இது உடலின் உள்ள லிபோபுரோடினை குறைத்து, இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது. ஆலிவ் எண்ணெய் சமையலில் பயன்படுத்துவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவை குறைகிறது.
 

குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன், சிறிது வினிகரை கலந்து தடவி ஊறவைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.
 
வயது முதிர்வால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால், அதை தடுக்கும் ஆற்றல் ஆலிவ் எண்ணெய்க்கு உண்டு. தினமும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தினால், சரும  கேன்சர், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் கேன்சர் போன்றவற்றை தடுக்கலாம்.
 
இதில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், உடலிலுள்ள தனித்த செல்கள், DNA மூலக்கூறுகளை தாக்குவதை தடுக்கிறது. ஆலிவ் எண்ணெய் உள்ள ஒலேயுரோபின் எலும்பை வலுவாக்கும் செல்களின் உற்பத்தியை ஊக்குவித்து, கால்சியத்தை எலும்புகளில் சேர்க்கும்.
 
தினமும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது, அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதியை குணமாக்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கிறது. சாப்பிடும் முன் ஒரு  ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் குடித்தால், பசியை குறைத்து, உடல் எடையை குறைக்கும்.
 
ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி படுத்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளிவருவதோடு, வயதான தோற்றத்தையும்  கட்டுப்படுத்தும்.
 
ஆலிவ் எண்ணெய்யில் கொஞ்சம் சர்க்கரை கலந்து, உதடுகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உதடுகளும் லிப்ஸ்டிக் அப்ளை செய்யாமலேயே ஆப்பில் நிறத்தில் ஜொலிக்கும். இவ்வாறு செய்வதால் உதடுகள் வறட்சி அடையாது.