செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 7 ஏப்ரல் 2022 (17:55 IST)

மலர்கள் எவ்வாறு மருத்துவத்திற்கு பயன்படுகிறது தெரியுமா...?

Flowers
மகிழம்பூ: மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.


தாழம்பூ: இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

செம்பருத்திப்பூ: இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

ரோஜாப்பூ: இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

வேப்பம்பூ: சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள்கூட ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

முருங்கைப்பூ: ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.

மல்லிகைப்பூ: கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.