வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (13:31 IST)

வீட்டில் உள்ள இந்த பொருட்கள் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் செய்யும் தெரியுமா...?

வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் இவை மூன்றும் மருத்துவக்குணம் கொண்ட உணவுப் பொருள்கள். வெந்தயத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. இது பித்தத்தைக் குறைக்கும். கருஞ்சீரகம் கபத்தைக் குறைக்கும். அதேபோல் ஓமம் செரிமானத்தன்மையை மேம்படுத்தும்.


தினமும் இதனை நாம் உட்கொண்டால் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுத்துவிடமுடியும். ஏனெனில் பெரும்பாலான நோய்களுமே வயிற்றில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. மந்தம், ஜுரம், கொழுப்பு ஆகிய அனைத்தும் ஏற்படுவதற்கான காரணம் செரிமானக் கோளாறுகள். வெந்தயம், ஹார்மோனைக் கட்டுப்படுத்தும், அதனால், உடல் மினுமினுப்பு உண்டாகும்.

ஓமம் மற்றும் கருஞ்சீரகம் உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும். உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகளை இந்த மருந்துகள் கொண்டிருப்பதால் எழும்புகள் மற்றும் பற்கள் உறுதியடையும்.

வெந்தயம் கூந்தல் வளர்ச்சிக்கு இது துணைபுரியும். மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்னைகளையும் சரி செய்யும். மேலும் சளியால் காது அடைக்கப்பட்டு கேட்கும் திறன் குறைவாக இருந்தால் அதைச்சரி செய்யும்.

ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் வெந்நீரில் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும். சுவைக்காக எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை தேன் சேர்த்து வடிகட்டி, சூடான தேநீராக பருகலாம்.

ஓமத்தை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது. ஓமத்தில் ‘தைமோல்’ என்னும் வேதிபொருள் உள்ளது. இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது.

தீராத சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாகும். தினம் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து அருந்துவதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும்.