Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும் நார்ச்சத்துகள் நிறைந்த சுரைக்காய்...!

Updated: சனி, 2 பிப்ரவரி 2019 (12:46 IST)
 
சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம்  சமநிலைப்படும்.
வெப்பத்தால் ஏற்படும் தலைவலியை போக்க இந்த சுரைக்காய் சதையை நெற்றியில் வைத்து வைத்தால் தலைவலி சரியாகிவிடும். சுரைக்காய்  நரம்புகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதோடு உடலுக்கு பலத்தையும் கொடுக்கிறது. குடல்புண் போன்றவற்றை சரிசெய்வதோடு  ரத்தத்தையும் சுத்தபடுத்தம் தன்மையை கொண்டுள்ளது.
 
சுரக்கைக் கொடியை பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது அந்த கொடியை நீரில் காய்ச்சி குடித்து வந்தாலோ உடலில்  தங்கிய நீரை வெளியாக்கி உடலில் உள்ள வீக்கத்தையும் குறைக்கிறது. மூலம் நோய் உள்ளவர்களுக்கு இந்த சுரைக்காய் நல்ல மருந்தாக  பயன்படுகிறது. மலச்சிக்கலையும் குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.
 
சுரைக்காயில் அதிகஅளவில் கலோரிகள் இல்லாததாலும் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.  சுரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.  
 
சுரைக்காய் கொடி, நீர்முள்ளி மற்றும் வெள்ளரிவிதை இவை மூன்றையும் சம அளவு எடுத்து அதை நீரில் நன்கு காய்ச்சி நீர் பாதியாக  வற்றியதும் வடிகட்டி குடித்து வந்தால் நீர் எரிச்சல், கல்லடைப்பு போன்றவை சரியாகிவிடும்.
 
சுரைக்காய் சாறு காதுவலியை போக்குகிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் சரியாகிறது. பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.  சுரைக்காய் இலையுடன் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால்  மஞ்சள்காமாலை சரியாகிறது.
 
பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு  சுரைக்காய் சிறந்த மருந்தாகும். 
 
சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments