வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!

கொத்தமல்லி போல அதன் விதைகளும் வாசனை நிறைந்தது. இதன் விதைகளில் ஏராளமான நன்மைகள் உள்ளது. தனியாவில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.
கொத்தமல்லி விதைகளை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இந்த கொத்தமல்லி விதைகளை முதல் இரவே 4 டீஸ்பூன் அளவு ஊறவைக்கவேண்டும். இதனை மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வெறும்  வயிற்றில் குடிக்கவேண்டும்.
 
கொத்தமல்லி விதைகளில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கண்களில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் கண் சிவத்தல்  போன்றவற்றை சரிசெய்ய பயன்படுகிறது.
 
கொத்தமல்லி விதை ஊற வைத்த நீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இதில் உள்ளது. அதனால்  சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம்.
 
சில பெண்கள் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். அவர்கள், இந்த தனியா ஊறவைத்த தண்ணீரை வாரத்தில் இரண்டு முறை குடித்து வந்தால், இந்த பிரச்சனை தீரும்.
 
3 கிராம் தனியா விதை பொடியை 150 மிலி தண்ணீரில் கொதிக்க வத்தும் குடிக்கலாம். இவ்வாறு தண்ணீரை குடிப்பதால் எலும்புகள்  வலுவாகும். மேலும் எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராது.
 
மாதவிடாய் கால பிரச்சனைகள் 6 கிராம் கொத்தமல்லி விதைகளை 500 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் சீராக்கப்பட்டு, மாதவிடாய்  சுழற்சி சிறப்பாக நடைபெற உதவும்.
 
கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில்  இருந்து விரைவில் விடுபடலாம்.