வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 17 ஜனவரி 2022 (15:18 IST)

எண்ணிலடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ள கொத்தமல்லி !!

கொத்தமல்லி தழையில் வைட்டமின் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்பு சத்தும், இரும்புச்சத்தும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அனைத்து சத்துக்களும் இதில் உள்ளது. இது வாயு பிரச்சனையை குணமாக்கும்.


கொத்தமல்லி தழையை தினமும் உணவில் அளவோடு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது எலும்பு, நரம்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியை தூண்டும் ஒரு மூலிகையாகும்.

கொத்தமல்லியில் ஆன்டி மைக்ரோபைல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனை ஜுஸ் செய்து பருகலாம்.

கர்ப்பிணிகள் கர்ப்பமான மாதத்தில் இருந்து கொத்தமல்லியை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தையானது ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதி அடையும்.

கொத்தமல்லியை சாப்பிட்டு வந்தால் மாலை கண்நோய் குறை நீங்கும். கொத்தமல்லி சாறு கடுமையான வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது.

கண்பார்வை பிரகாசமாகும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு உணவில் கொடுத்து வரவேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் மாலை கண்நோய் குறை நீங்கும்.

கொத்தமல்லி கீரையில் ஏ, பி, சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லியை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். எனவே அளவோடு சாப்பிடுவது மிகவும் நல்லது.