செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (14:56 IST)

தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் சத்துக்கள் குடைமிளகாயில் உள்ளதா...?

குடைமிளகாயில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி விட்டமின் எ, விட்டமின் சி, விட்டமின் பி6 போன்ற சத்துக்களும் அதிகமாகவே உள்ளது.


குடைமிளகாயை உணவில் சேர்த்தால் விரைவில் ஜீரணம் ஆகிவிடும். எனவே, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை கொண்டது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.

மூட்டு வலிக்கு நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. நீரிழிவு நோயில் இருந்து விடுபட குடைமிளகாய் ஒரு நல்ல மருந்து. அதிலும் சர்க்கரை நோய் இருப்போர் இதனை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைக்க, குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.

குடைமிளகாயில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரித்து, தலைமுடி நுனியில் ஏற்படும் பிளவை தடுக்கிறது.

கண்பார்வை சிறப்பாக்கவும், இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடைமிளகாய் காக்கிறது. குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகிறது.