Daily Horoscope
✕

அல்சர் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் முட்டைக்கோஸ் ஜூஸ் !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 7 மே 2021 (10:36 IST)

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், முட்டைக்கோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், நம் உடம்பில் அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாவை அழித்து, அல்சர் பிரச்சனைகளை விரைவில் குணமாக்குகிறது.
 
முட்டைக்கோஸை காய்களோடு சமைத்து சாப்பிடுவதை விட அதை ஜூஸ் செய்து சாப்பிடுவதால், அதிலுள்ள முழுமையான சத்துக்களையும் நம் உடல் உறிஞ்சிக்  கொள்கிறது. எனவே தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முட்டைக்கோஸை ஜூஸ் செய்துக் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
 
முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் இருப்பதால், எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இது குடலில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களை அழித்து, குடல்புண் வராமல் தடுக்கிறது. 
 
முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள சத்துக்கள் சுவாசப் பாதையில் ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
 
உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நம் உடம்பில் உள்ள கல்லீரலை சுத்தம் செய்து, கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. 

முட்டைக்கோஸ் ஜூஸில் குளுக்கோஸினோலேட்டுகள் என்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, உடலைத் தொற்றும் நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க்கிறது.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments