1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பயன்தரும் பிளாக் டீ !!

பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது. 

பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது. ஒரு கப் பிளாக் டீயில் உடலை ஹைட்ரேட் செய்து  சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
 
பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
 
பிளாக் டீ மன அழுத்தத்தை தடுக்கிறது. இது ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது. இது கொழுப்பு அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயங்களை  குறைக்க உதவுகிறது.
 
பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வரும் போது அதிலிருக்கும் மூளையை புத்துணர்ச்சியடையச் செய்யும் ரசாயனங்கள் மூளை செல்களை அதிகம் தூண்டி தெளிவாக சிந்திக்கும் ஆற்றலையும், சிறந்த ஞாபக சக்தியையும் வயதானவர்களுக்கு கொடுக்கிறது.
 
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது. இதிலிருக்கும்  வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும் ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.