Daily Horoscope
✕

உடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை

Written By Sasikala
Updated: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (12:36 IST)
 
இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
 
கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல்  போன்ற பிரச்சனைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது.
 
வெற்றிலைகளில் இரைப்பைக் குடல் வலி நீக்கி குணங்கள் அடங்கியுள்ளது. அதே போல் சரியான செரிமானத்திற்கும் உதவிடும். வெற்றிலையை மெல்லுவதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, வயிற்றில் சளி உடைய பொருளை அதிகரிக்கும். இதனால் அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கப்படும். இதனால் காஸ்ட்ரிக் அமிலத்தின் தீய தாக்கங்களில் இருந்து வயிற்றின் உட்பூச்சு  பாதுகாக்கப்படும் என ஒரு ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
 
வெற்றிலையை மெல்ல ஆரம்பித்த உடனேயே வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நீங்கள் உண்ட உணவை  செரிக்க சொல்லி வயிற்றுக்கு சிக்னல் அனுப்பும் உங்கள் வாய். இதனால் செரிமானம் சிறப்பாக செயல்பட தொடங்கும். வயிற்றில் இருந்து நச்சுக்களை நீக்கவும் இது உதவுகிறது.
 
குறிப்பு: மஞ்சள் நிறத்தில் அல்லது அழுகிய நிலையில் உள்ள வெற்றிலையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது  வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments