புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

செருப்பு அணியாமல் வெறும் காலில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!

அன்றைய காலங்களில் செருப்பு இல்லாமல் காடுமேடு என எந்த விதமான பயமும் இல்லாமல் நடந்து வந்தனர். அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் அது அமைந்து இருந்தது. ஆனால் தற்போது வீட்டிற்குள்ளேயே காலணிகளை அணிந்து நடக்கும் அவலம் உள்ளது.

பொதுவாக வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும். அதேபோல் நிலத்தில் காலூன்றி நிற்பதால் சாதாரணாமாக உடலில் உள்ள 70% நீரை  விட அதிகம் சுரக்கும். 
 
பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு நரம்புகள் மூளை, இருதயம் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளுடன் நேரடியாகத்  தொடர்பு கொண்டுள்ளன.
 
வெறுமையான கால்களில் ஓடுவது, சிறிது தூரம் நடப்பது இரத்த ஓட்டத்திற்கும், ஆரோக்கியம் மிகுந்த வாழ்க்கைக்கும் அவசியமானது. வெறும் கால்களில்  நடப்பதால் மன உளைச்சல் குறைகிறது. தூக்கத்தினை அதிகரிக்கிறது.
 
கரடுமுரட்டுள்ள பகுதிகளில் வெறுல் காலில் நடப்பதால், பாதத்திற்கு நேரடி அழுத்தம் கிடைத்து உடலின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கிறது. நரம்பு மற்றும் எலும்பு மண்டலமும் வலுவடைகிறது.
 
வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது சரியான முறையிலான ரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்யமான வாழ்வுக்கும் இன்றியமையாதது என நவீன மருத்துவ இயல்  அண்மையில் வெளிப்படுத்தி உள்ளது.
 
ஒரு நாளைக்கு சிறிது நேரமாவது செருப்பு அணியாமல் வெறும் காலில் சிறிது தூரம் கல், மண், புல் போன்வற்றை மிதித்தபடி நடந்து சென்றால் இலவசமாக இயற்கையே நமக்கு அக்குபஞ்சர் சிகிச்சையை இலவசமாக கொடுக்கும்.