Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை உணவான முளை கட்டிய தானியத்தில் கிடைக்கும் நன்மைகள்!

Written By Sasikala
Updated: திங்கள், 24 ஜூலை 2017 (11:52 IST)


பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு,  வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.
 
இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 –  10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு.
 
இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
 
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும்.
 
முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன்  குறையும்.. மூட்டுவலி தீரும். எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம்  உண்டு.

எல்லாம் காட்டு

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments