வியாழன், 5 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 8 ஜனவரி 2022 (14:37 IST)

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் பயன்கள் !!

வாழைப்பழம், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் சத்துக்களையும் கொண்டதாகும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து, நமது தசை பிடிப்பை நீக்குகிறது.

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
 
பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
 
கற்பூரவள்ளி வாழைப்பழத்தில், அதிக அளவு செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ஜீரன சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
 
கற்பூரவள்ளி வாழைப்பழம் எலும்புகளுக்கு நல்லது. ஏனெனில் இதில் உள்ள மேங்கனீஷ், மெக்னிஷியம் எலும்புகளை பலப்படுத்த உதவும்.
 
இந்த பழம், தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும்.
 
கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் தோலை வீணாக்காமல் அதை சிறுசிறு துண்டாக வெட்டி மூன்று நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம்.