வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (12:34 IST)

கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் உண்டாகும் நன்மைகள் !!

கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன.


கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதனால் மூளை புத்துணர்ச்சி அடைந்து மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் அதன் வீரியம் குறைந்து நோய் தாக்கமும் குறையும்.

கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு தீர்ந்து விடும்.

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் கொய்யா பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். கொய்யா பழத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான “போலிக் ஆசிட்” நிறைந்திருப்பதால் தாய்க்கும் வளரும் குழந்தைக்கும் அதிக நன்மையை தரும்.
அஜீரண கோளாறினால் பாதிப்படைந்தவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டு வர எளிதில் ஜீரண சக்தி ஏற்பட்டு வயிற்று உப்பசம் போன்றவை ஏற்படாமல் சரி செய்யும்.

சருமத்துக்கு மிகவும் சிறந்த பழமாக கொய்யா விளங்குகிறது. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும். தோல் சுருக்கத்தைக்  குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா பழம் பயன்படுகிறது.