புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினந்தோறும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் !!

பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
 


தினந்தோறும் பேரிச்சம் பழம் சாப்பிடுபவவர்களுக்கு கண்களின் பார்வை திறன் மேம்படும். கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.
 
கருவுற்றிருக்கும் பெண்களும் பேரிச்சம் பழங்களை அதிகம் சாப்பிட்டு வருவது, அப்பெண்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும்  நல்லது.
 
தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில பேரிச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தினால் நரம்புகள் வலுப்பெற்று, ஆண்மை  குறைபாடுகள் நீங்கும்.
 
பேரிச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு சிறுநீரக புற்று, குடல் புற்று போன்றவை ஏற்படும் ஆபத்து குறையும்.
 
மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினமும் மூன்று வேளை உனவை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்  மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.