வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சங்குப்பூவின் அற்புத மருத்துவ பயன்கள் !!

சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சேர்ந்தது. இதன் பூக்கள் நீல நிறத்திலும் வெண்மை நிறத்திலும்  காணப்படும்.
 

சங்குப் பூ இந்தத் தாவரம் முழுவதும் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. இலையை மஞ்சளுடன் பயன்படுத்தினால் கட்டி, வீக்கம் கரைக்கும். வேருடன் மிளகு  சேர்த்து கொதிக்க வைத்து கசாயம் செய்து காலை மாலை அருந்திவர சளி கோழை நீங்கும். 
 
இம்மலர்கள் மனசோர்வு, மனக்கவலை, உடலில் உள்ள அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்கவல்லது. சங்குப்பூவில் ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ளதால் இது நம்  உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமைடவைதைப் பெருமளவு தடுத்து நம்மை ஆரோக்கியமுடன் இருக்கச்செய்வதுடன் நம் சருமம் இளைமையுடன் தோன்றவும்  உதவுகிறது. மூச்சுத் திணறல், இருதய சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
 
உலர்ந்த மலர்கள், புளூ டீ எனும் நீல நிற டீ தயாரிக்கவே பிரத்யேகமாக விலைக்கொடுத்து பல  நாடுகளில் வாங்கப்படுகின்றன. ஒரு டம்ளர் சுடு நீரில் 5 நீல நிற  உலர்ந்த  மலர்களைப் போட்டு 10 நிமிடம் ஊறவைத்தால் புளூ டீ தயார். இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
 
நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போதுசங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.