வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அன்றாட உணவில் இந்துப்பை சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!

இந்துப்பு கடினமற்ற உடையும் தன்மைமிக்கதாகவும், சுவையாகவும் காணப்படுகின்றன. அந்த உப்பு பாறைகளிலிருந்து கிடைக்கும், பாறை உப்பு எனும் இந்துப்பாகும். 
மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. மனிதருக்கு நலம் தரும் 80 வகையான கனிமத்தாதுக்களை  கொண்டுள்ளது.
 
இந்துப்பு கொண்டு வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை மற்றும் வாய் புண் ஆகியவை சரியாகும். அல்சர், பைல்ஸ் போன்ற  பிரச்சனைகளுக்கு சாதா உப்பை தவிர்த்து இந்து உப்பை உணவில் சேர்ப்பதன் மூலம் குணம் பெறலாம்.
நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்துப்பு என்று கேளுங்கள். சிறிதளவு உஷ்ணமுள்ளது. வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது. 
 
கடலுப்பை சாப்பிடும்போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது. ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும். எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள். 
 
கிட்னி பழுது, கிட்னி சரியாக இல்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னியே மாற்ற வேண்டும் என்ற ஆபத்து நிறைந்த பிரச்சனைக்கும்  நிவாரணம் தருகிறது. மேலும் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும். செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான  மருந்தாக விளங்குகிறது.