1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (10:50 IST)

தினமும் உணவில் மிளகு சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் !!

Pepper
கருப்பு மிளகு உணவுக்கு சுவை மற்றும் செரிமானத்தை ஊக்குவிப்பதைத் தவிர,  பசியை தூண்ட செயல்படுகிறது.  அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து ஒரு தேக்கரண்டி வெல்லம் உட்கொள்வது பசியை அதிகரிப்பதுடன் செரிமான பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.


கருப்பு மிளகு  வாத நோய் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சினை  உள்ளவர்களுக்கு மிளகு பயன் தரும். மிளகு உடலில் யூரிக் அமிலத்தை நீக்குவதின் மூலம் நாள்பட்ட வாத நோய் மற்றும் கீல்வாதம் ஆகியவற்றின் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

கருப்பு மிளகு பல் சிதைவு மற்றும் துவாரங்களை எதிர்த்துப் போராடவும்  வலுவான பற்களை ஊக்குவிக்கவும் கருதப்படுகிறது. கருப்பு மிளகு பல் வலிகளை குணப்படுத்துவதோடு வலிகளையும் குறைக்கும். உடல் எடையை குறைப்பதற்கு தினமும் உணவில் கொஞ்சம் மிளகு பொடியை தூவி சாப்பிடறது ரொம்பவே நல்லது.

கருப்பு மிளகு உடலில் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் வலி நிவாரண பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, இந்த விளைவுகளை உருவாக்கும் மருந்துகளுடன் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.  

இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்பு உடைத்து எரியும் தன்மை இதற்கு உண்டு இது வந்து அதிகப்படியான வியர்வை மற்றும் சிறுநீர் கழிக்கும் அளவையும் அதிகரிக்க கூடியது நீர் உடலில் இருந்து வெளியேற்ற அதனால உடல் உள்ள நச்சுப் பொருள் அதோட சேர்ந்து வெளியேறிடும்.