புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருந்தாக பயன்படும் முடக்கத்தான் செடி மற்றும் இலைகள் !!

முடக்கத்தான் கீரை பச்சிலை மருந்துகளில் மிகச்சிறந்த பச்சிலையாக விளங்குகிறது. இலையும், வேரும் இரண்டுமே வைத்தியத்துக்கு உதவுகின்றன.


முடக்கத்தான் கீரையை அரைத்துக் காலையில் நெல்லிக்காய் அளவு உண்ணலாம். சொரிசிரங்கு, கரப்பான் போன்ற நோய்கள் குணமாகும்.
 
இதன் குடிநீர் குடலைச் சுத்தமாக்கி மலச்சிக்கலைப் போக்கும் ஆற்றல் பெற்றது. முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு அரைத்து சிறு கருப்பட்டி கூட்டித் தின்ன குடலிறக்க நோய் குணமாகும்.
 
இடுப்புப் பிடிப்பு, இடுப்புக் குடைச்சல், கை-கால் வலி, கை-கால் குடைச்சல் முதலியவற்றை முடக்கத்தான் கீரை மருந்தாக உதவுகிறது. கீரையை வெல்லத்துடன் சேர்த்து நெய்விட்டு வதக்கி உண்ண கண்வலி நீங்கும். கண் சம்பந்மான நோய்களுக்கு இக்கீரை நல்லது.
 
மூல நோய்களுக்கும் இக்கீரை சிறந்த மருந்தாகும். ஒரு பிடி முடக்கத்தான் கீரையை இடித்து ஒரு பழகின சட்டியில் போட்டு அரைப்படி நீர் விட்டு அரைக்கால் படியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஒரு வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் இரண்டு வேளை மூன்று நாட்கள் குடிக்க நரம்புகள் சம்பந்தமான மேகவாய்வு, மூச்சுப்பிடிப்பு மூலம், கபம் சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் இவைகள் குணமாகும்.
 
முடக்கத்தான் செடியின் இலையும் வேரும் மருந்தாகப் பயன்படுகிறது. இவை துவர்ப்பு, கைப்பு, வெப்பம், கார்ப்பு ஆகிய குணங்களைக் கொண்டிருக்கும். இக்கீரை சிறுநீர்ப் பெருக்கி, மலமிளக்கி, பசித் தூண்டி உடல் உரமாக்கி, தடிப்புண்டாக்கி ஆகிய செயல்களைப் புரியும்.
 
இலை, வேர் முதலியவைகளைக் கஷாயம் செய்து வாதம், மூலம், நாள்பட்ட இருமல் முதலியவைகளுக்கும் கொடுக்கலாம். இலைச் சூரணத்துடன் சித்திரமூல வேர்ப்பட்டைச் சூரணம், கரியபோளம் இவைகளைச் சேர்த்து மூன்று நாள் கொடுக்க கதகக் கட்டு நீங்கும்.
 
வேர்க்கஷாயத்தை மூல நோய்க்குக் கொடுக்கலாம். இதன் கஷாயத்துடன் ஆமணக்கு எண்ணெய் விட்டுக் கொடுக்க பேதியாகி வயிற்றிலுள்ள வாதநீர், பித்தநீர் முதலியவைகளை பேதி மூலம் வெளிப்படுத்திதேக ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.