புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்றாட உணவில் வறுத்த பூண்டு சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுவதால் வாய்வு பிரச்சனைகள் வராது. இதை அன்றாட உணவில் அதிகமாகவே சேர்த்துக் கொள்ளலாம். தினமும் வறுத்த பூண்டு சாப்பிட்டால் நமக்கு அதிக அளவு நன்மையை தருகிறது.

தினமும் வறுத்த பூண்டு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் உயர் கொலஸ்ட்ரால் இதய நோய், மாரடைப்பு, பெரும்தமனி அடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுத்து காத்துக் கொள்கிறது மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்யும்.
 
பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்கிறது. பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகிறது. தினமும்  பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒரு ஆரோக்கிய வளையமாக இருக்கிறது.
 
வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் ஏற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது. கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்துக்கொள்கிறது. எலும்புகளை பலமாக வைத்துக்கொள்கிறது.
 
பூண்டு மருத்துவக் குணத்தால் உடலின் சோர்வை நீக்குகிறது. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச்செய்கிறது.