Daily Horoscope
✕

முகத்தில் உள்ள கருமையை நீக்க உதவும் அழகு குறிப்புகள் !!

Written By Sasikala
Updated: திங்கள், 8 மார்ச் 2021 (16:55 IST)

கற்றாழை ஜெல்லை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர,  முகத்தில் உள்ள கருமை படிப்படியாக முற்றிலும் அகலும்.
 
முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிரை சேர்த்து நன்கு அடித்து, அவற்றை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு  ஒருமுறை செய்து வர, முகத்தில் இருக்கும் கருமை நீங்கும்.
 
வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடியோ அல்லது வாரம் 3 முதல் 4 முறையோ செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.
 
முகம் கருமை நீங்க இந்த முறைகளை பயன்படுத்தி பயன் பெறலாம். தேவையான பொருள்கள்: காபி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் பால் - ஒன்றரை டேபிள் ஸ்பூன் செய்முறை: ஒரு கிண்ணத்தில் பால் மற்றும் காபி பவுடரை நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
 
பின் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி துடைக்க வேண்டும். கலந்து வைத்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். 15  நிமிடத்திற்கு பிறகு மிதமான குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேஸ் மாஸ்க் வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில்  உள்ள கருமைகள் நீங்கும்.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments