வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் துளசி !!

துளசியில், துளசி, கருந்துளசி, செந்துளசி, நாதுளசி என நான்கு வகை உண்டு. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதை அப்படியே சாப்பிடக்கூடாது.

துளசியில் இனி துளசி என்றால் 21 இலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மிளகு சேர்த்து மைய அரைக்க வேண்டும். பிறகு வெள்ளைத்துணியில் வைத்து பிழிந்து இரண்டு அல்லது மூன்று துளிகள் மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாரம் ஒரு நாள் தொடர்ந்து காலையில் கொடுத்தால் நுரையீரல் மற்றும்  அது சம்பந்தமான நோய்கள் வராது.
 
துளசி இலையில் ஒன்பது மிளகு வைத்து அரைத்து மூன்று நாள் சாப்பிட்டால் பேய் சொறி என்கிற தோல் அலர்ஜியை போக்கும்.
 
துளசி இலையில் ஐந்து மிளகு வைத்து அரைத்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தில் மூன்று, நான்கு, ஐந்தாவது நாட்களில் மூன்று நாள் சாப்பிட்டால் மாதகால வயிற்று வலியை போக்கும்.
 
துளசியில் ஏழு மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாறெடுத்து, அதை வெள்ளைத்துணியில் நனைத்து நீண்டநாள் ரணம், புண் ஆகியவற்றின் மீது தொடர்ந்து ஐந்து நாள் வைத்து வந்தால் புண் ஆறிவிடும்.
 
விஷக்கடிகளுக்கு ஒன்பது மிளகு வைத்து அரைத்து தினமும் காலை ஏழுநாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விஷம் முறியும். தோல் வெடிப்பு, தலையில் பொடுகு, சொறி, தலைப்புண், மீசை மீது ரணம், தாடிப்புண் போன்றவை சரியாகும்.
 
துளசியுடன், இரண்டு மிளகு அளவு புதினா உப்பு, ஐந்து மிளகு ஆகியவற்றை அரைத்து, மூன்று நாளைக்கு கொடுத்தால் பக்கவாதம், ஜன்னி, ஈர சம்பந்தமான  நோய்கள் குணமாகும்.
 
துளசியுடன் ஐந்து மிளகு, மூன்று மிளகு அளவு மஞ்சள் தூளும் சேர்ந்து அரைத்து மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் மூச்சு பயிற்சி (யோகாசனம்)  போன்றவைகளுக்கு உகந்தது. நீர் உடல் குறையும். இதே துளசியுடன் மூன்று மிளகு, போதிய கற்கண்டுடன் அரைத்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.