Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாள்பட்ட இருமலை கூட எளிதில் குணமாக்கும் அதிமதுரம்...!!

Written By Sasikala
Updated: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (10:41 IST)

அதிமதுரத்துடன், திப்பிலி போன்ற சில மூலிகைகளை பொடியாகச் சேர்த்து, நீரில் ஊறவைக்க வேண்டும். இந்த நீரை குழந்தைகள், பெண்கள் குடித்துவருவதால் நாள்பட்ட இருமல் கூட விரைவில் சரியாகும். பொடியை உணவில் சேர்த்து வருவதால், தொண்டை கரகரப்பு மற்றும் குரல் வளம்பெரும்.
 
மஞ்சள் காமாலை, நெஞ்சுச்சளி, தலைவலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக அதிமதுரம் இருக்கிறது. மேலும் தலைவலி மற்றும் நெஞ்சு சளியை வரவே  வராமலும் தடுக்க இயலும். 
 
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஒருமுறை மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு மீண்டும் வராமலும் இந்த அதிமதுர மூலிகை பயன்படுகிறது.
 
பெண்களுக்கு, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், சளி, இருமல் நீங்க, மூட்டு வலி சரியாக என பெரிய லிஸ்ட்டே உள்ளது. பெண்களுக்கு மிகச்சிறந்த நன்மைகளை அதிமதுரம் தரவல்லது. சுடு நீரில் இதன் பொடியைக் கலந்து தினமும் கூட குடிக்கலாம்.
 
அதிமதுர தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த அதிமருதத்தை ஊறவைத்தும் எடுத்துக்கொள்ளலாம். ஆண்களுக்கு இருக்கும் ஆஸ்துமா, இளநரை மற்றும் ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களையும் எளிதில் சரிசெய்யலாம்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments