1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கரிசலாங்கண்ணி இலையில் இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் உள்ளதா...!

கரிசலாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும் மற்றும் கண்களுக்கும் மூளைக்கும் நல்ல குளிர்ச்சியை தரும். புண்கள் அல்லது அடிபட்ட இடத்தில் இந்த கீரையின் இலையை அரைத்து அதன் மேல் தடவி வர நல்ல பலனை தரும்.
குழந்தைளின் சளிக்கு இந்த கீரை சிறந்து மருந்தாக இருப்பதுடன், கல்லீரல் வீக்கம் அடைந்த குழந்தைகளுக்கு இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு  அரைத்து மோரில் கரைத்து கொடுத்துவர ஈரல் வீக்கம் குறையும்.
 
மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கும் காலங்களில் கரிசலாங்கண்ணியின் இலைய வேகவைத்து அதை வடிக்கட்டி காலை  மற்றும் மாலை குடிக்கவும். கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் தேங்காய் எண்ணையைக் கலந்து அடுப்பில் வைத்து சூடேற்றி, அந்த எண்ணையை தலைக்கு  தடவினால் முடி உதிர்வது குறையும்.
 
கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.
 
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
 
கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை  பெறும்.
 
பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.