புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாய்ப்புண்ணை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

கொப்பரைத்தேங்காயை துருவல் அரை கோப்பையுடன் அரை தேக்கரண்டி கசகசா சேர்த்தரைத்து துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண்  குணமாகும்.
திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும்.
 
1 பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்.
 
நெல்லிபட்டையை தூள் செய்து தேனில் குழைத்து வாய்ப்புண் மீது தடவ குணம் ஆகும்.
 
மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.
 
மணத்தக்காளி இலைகளை மென்று சாறை 1 நாளைக்கு 6 முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்.
 
மருதாணி இலைகளை 1 மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய் கொப்புளிக்க வாய்வேக்காடு, வாய்ப்புண், தொண்டைப்புண்  ஆறும்.