வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (18:30 IST)

பெருஞ்சீரகத்தில் உள்ள அற்புத மருத்துவ குறிப்புகள் !!

பெருஞ்சீரகத்தின் சிறந்த செரிமான பண்புகள் மற்றும் நுண்ணுயிர் எதிர் பண்புகள் வாயுவைக் குறைக்க உதவும் என்று கருதப்படுகிறது.
 


செரிமான இயக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் அதிகப்படியான வாயு உருவாவதை குறைத்து குடல்களை எளிதில் கடந்து செல்ல அனுமதிக்கிறது. மேலும் அதன் ஆண்டி மைக்ரோபியல் விளைவால் வாய்வுக்களை உருவாக்கும் பாக்டீரியாவை வளரவிடாமல் தடுக்கிறது.

பெருஞ்சீரகம் விதைகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இது இரத்ததில் உள்ள திரவ அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகம் உட்கொள்வது உமிழ்நீரில் நைட்ரைட்டின் அளவை அதிகரிக்கின்றன.

பெருஞ்சீரகம் விதைகளில் உள்ள அதிக அளவு பைட்டோ நியூட்ரியண்ட்கள் உள்ளன. இவை சைனஸை அழிக்க உதவுகிறது. மேலும் இவை மூச்சுக்குழாய் தளர்வடைய செய்வதன் மூலம் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச கோளாறு தொடர்பான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

பெருஞ்சீரகத்தில் உள்ள அனெத்தோல் என்ற சேர்மம் கேலக்டாகோக்ஸை அதிகரிப்பதன் மூலம் பாலுற்பதியை தூண்டுகிறது. மேலும் அனேத்தோல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்பாட்டை அனெத்தோல் பிரதிபலிப்பதன் மூலமும் பாலுற்பத்தியை ஊக்குவிக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெருஞ்சீரக சாறு, ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலமும், சரும செல்களின் ஆயுளை மேம்படுத்துவதன் மூலமும் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

பெருஞ்சீரகம் விதைகளில் உள்ள எண்ணெய்கள் மற்றும் நார்ச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றன.