1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (10:42 IST)

ஆண்கள் தலைமுடி பராமரிக்க அசத்தலான டிப்ஸ்!

Hair
ஆண்கள் பலருக்கு சிறுவயதிலேயே இளநரை, முடி உதிர்தல் பிரச்சினை உண்டாகிறது. தலைமுடியை சரியாக பராமரித்து இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட வீட்டு மருத்துவமே கை கொடுக்கிறது.


  • தலைமுடியை பராமரிக்க விரும்பினால் குறைந்த விலையில் கிடைக்கும் மூன்றாம் தர ஹேர் ஸ்டைல் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
  • முடி உதிர்வு அதிகம் உள்ளவர்கள் நெருக்கமான பல் கொண்ட சீப்பை விடுத்து அகல பல் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்.
  • வாரத்தில் ஒரு முறை சீயக்காய், நல்லெண்ணெய் வைத்து குளிப்பது தலை முடிக்கு ஆரோக்கியம் தரும்.
  • சோப்பை தலை முடிக்கு பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • தலைமுடியை உலர்த்த ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்துவது முடி உதிர்வை அதிகரிக்கும்.
  • அதிகமாக புகைப்பிடிப்பது தலைமுடி உதிர்வை அதிகரிக்கும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது.
  • தலைமுடிக்கு ஹேர் கண்டிஷனர்கள் பயன்படுத்துபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.