வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (11:40 IST)

அனைத்து பாகங்களும் அற்புத மருத்துவகுணம் கொண்ட ஆவாரம் பூ !!

Avarampoo
ஆவாரம் பூவின் பட்டை, வேர், இலை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாய் வைத்திருக்கும். மேலும் காய்ச்சலை குணப்படுத்த ஆவாரம் பூ பயன்படுகிறது.


உடலில் காய்ச்சல் ஏற்படும் ஏதாவது ஒன்று நுண்ணுயிரி தொற்றுகளின் மூலமே வருகிறது நம் உடலில் எப்படிப்பட்ட காய்ச்சல் இருந்தாலும் ஆவாரம் பூவை போட்டு வேக வைத்து நீர் அந்த நீரை காய்ச்சல் நேரங்களில் குடித்து வந்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உடல் காய்ச்சல் குணமாகும்.

ஆவாரம்பூ 100 கிராம் வெந்தயம் 100 கிராம் பயத்தம் பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ளவேண்டும் இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து, வாரம் இருமுறை தலைக்கு அலசி வர கூந்தல் கருகருவென்று வளரும்.

வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்ற உஷ்ணம் நம்மை தாக்காது. கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் இந்த ஆவாரம் பூ. எனவே முடி உதிர்வு பிரச்சினையும், உடல் உஷ்ணத்தால் ஏற்படும் முடி உதிர பிரச்சினைகளை சரிசெய்யும்.

ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்திப் பூ,தேங்காய்ப்பால் ஒரு கப் எடுத்துக் கொண்டு வாரம் ஒருமுறை அரைத்து தலைக்கு குளித்தால் உடல் குளிர்ச்சியாகி முடி கொட்டுவது நின்று கூந்தல் வளர தொடங்கும்.

ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்ணில் ஒத்தி எடுத்து வந்தால் சூட்டினால் ஏற்படும் கண் நோய் அனைத்தும் குணமாகும்.