வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (14:25 IST)

அனைத்து பகுதிகளுமே மருத்துவ பயன் கொண்ட வில்வம் !!

வில்வ மரத்தின் இலைகள், கொட்டைகள், பட்டை, பூக்கள், பழம் மற்றும் குச்சி ஆகிய இவை அனைத்துமே மருத்துவ பயன் கொண்டவை.


வில்வப்பழங்கள் கோடைக்காலத்தில் பழுக்கும் தன்மை கொண்டது. இதன் தோல் பகுதி வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். வில்வம் காய் பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பானதாகவும் மாறிவிடும்.

வில்வப்பழம் இதயத்திற்கு வலு சேர்க்கிறது. வில்வப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வில்வப்பழம் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.  வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் ஒரு சிறந்த மருத்தாகும்.

வில்வ பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். சிறுநீர் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். தாய்மார்களுக்கு தாய்ப்பாலை பெருக்கும். மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும். சிறுநீரக கற்களைக் கரைக்கும். இதை ஊறுகாய் போல போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

உலரவைத்த வில்வப்பழம் ஒரு 5 கிராம் அளவுள்ள ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளும் சக்தி அடையும்.

வில்வ இலை மலத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று வலியைப் போக்கும். எல்லாவிதமான மேக நோய்க்கும் வில்வம் அரும் மருந்தாக உள்ளது. எல்லா விதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. வில்வப் பழம் பித்த சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. வில்வத்தின் இளம் தளிர் இலைகளை லேசாக வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்கக் கண்வலி, கண் சிவப்பு, அரிப்பு என அனைத்தும் குணமாகும்.