வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அனைத்து பகுதிகளும் அற்புத பயன்தரும் பிரம்மத்தண்டு !!

பிரம்மத்தண்டின் இலை, பால், வேர், விதை ஆகியவை மருத்துவ பயனுடையவைகள். இலை, விதை சூரணம் செய்து மூன்று அரிசி எடையளவு தேனில் கலந்து சாப்பிட்டுவர வரட்டு இருமல், சளி இருமல் குணமாகும்.

பிரம்மத்தண்டில் வடியும் பாலை கண்ணில் ஒரு சொட்டு விட்டுவர கண்வலி, சதைவளர்தல், கண்சிவத்தல், கண் எரிச்சல், கண்ணில் ஏற்படும் அறிப்பு ஆகியவை  தீரும்.
 
பிரம்மத்தண்டு முழு செடியையும் தீயிட்டு எரித்து சாம்பலாக்கி பல் தேய்த்து வர பல்கூச்சம், பல்வலி, பல்சொத்தை சீழ் வடிதல், பல் ஆட்டம் ஆகியவை குணமாகும். வேர் பகுதியை சூரணம் செய்து அரிசி அளவு வெந்நீரில் கலந்து 4 நாட்கள் குடிக்க மலத்தில் புழுக்கள் வெளியாகும்.
 
பிரம்மத்தண்டின் இலைச்சாற்றை பத்து மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வரச் சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் ஆகியவை தீரும். கரப்பான், பேய்ச்சொறி, கை, கால், பாதங்களில் வரும் புண்கள் குணமாக இலையை அரைத்து பூச குணம் காணலாம்.
 
பிரம்மத்தண்டின் இலையை அரைத்துத் தேள் கடி வாயில் வைத்துக் கட்டினால் தேள் கடி விடம் இறங்கும். சமூலச்சாறு 30 மி.லி. கொடுத்துக் கடிவாயில் அரைத்துக் கட்ட பாம்பு விடம் தீரும் பேதியாகும். உப்பில்லாப் பத்தியம் இருத்தல் வேண்டும்.
 
பொன்னாங்கண்ணி, சோற்றுக் கற்றாழை, கரிசாலை போல கண் நோய்க்கு நல்ல குணமளிக்கும். பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்குத் தேய்த்துக் குளிக்க  40 நாளில் கண் பார்வை மங்கல், எரிச்சல், நீர் வடிதல் குணமாகும். இதன் இலையை ஒடித்தால் பால் வரும், இந்த பாலை கண்ணில் விட கண்வலி, சதை  வளருதல், சிவத்தல், அரிப்பு, கூச்சம் ஆகியன குணமாகும்.