Daily Horoscope

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்ட தூதுவளை !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (16:12 IST)

தூதுவளை மூலிகையின் அனைத்து பாகங்களுமே (இலை , தண்டு, பூ, காய், கனி, வற்றல்) இருமல், சளி முதலிய நோய்களிலிருந்தும், கண் நோய், எலும்பு நோய், காது நோய்களுக்கெல்லாம் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
 
தூதுவளையின் இலைகள் மூச்சுப்பாதையில் கோழையகற்றி செய்கையை வெளிப்படுத்தி இருமல், இரைப்பு நோய்களைக் குணப்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்தது.
 
தினந்தோறும் காலையில் ஒரு கைப்பிடி தூதுவளை இலையும், 3 அல்லது 5 மிளகும் சேர்த்து மென்று சாப்பிட கப நோய்கள் குணமாகும். இலைகளைத் துவையல், குழம்பு செய்து சாப்பிட கோழைக்கட்டு நீங்கும். இலையை எண்ணெய் விட்டு வதக்கி துவையல் செய்து உண்டு வர மார்புச் சளி, இருமல், நீரேற்றம் முதலியவை கட்டுப்படும்.
 
தூதுவளையைக் கொண்டு செய்யப்படும் குடிநீருடன் (கஷாயம்) தேன் கலந்து பருக சுரம், ஐய சுரம், வளி சுரம் இவை அனைத்தும் குணமாகக் கூடும். தூதுவளை நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மை இருக்கின்றன.
 
தூதுவளை கீரையை சமையலில் சாம்பார், ரசம், துவையல் போன்ற முறைகளில் தயாரித்து பயன்படுத்தலாம். இதை குழந்தைகளுக்கு குறைந்த அளவு கொடுக்கலாம். சளி தொந்தரவுகள் இருப்பவர்கள் பிரச்னை தீரும் வரையும் மற்றவர்கள் வாரத்திற்கு 2 முறையும் பயன்படுத்தலாம்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments