Daily Horoscope
✕

ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

Written By sinoj
Updated: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (15:41 IST)
ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்த நிலையில்  ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
 
வரும் மக்களவை தேர்தலில் ஆந்திர மாநிலத்திற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில், இதில், கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டியிடுகிறார். 
 
ஆந்திராவில் ஆளுங்கட்சியாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், வரும் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்கவுள்ளது. இதிலும் சகோதருக்கு எதிராக ஷர்மிளா தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
 
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் ஷர்மிளா போராட்டம் நடத்தி, எதிர்ப்பு அரசியல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு: தமிழக அரசின் 'இனிய இல்லம்' புதிய திட்டம்!

அதிபயங்கர சைபர் அட்டாக்.. 7 நாட்களுக்கு தேவையான பொருட்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.. ஜப்பான்

ஆந்திரா, தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் SIR.. தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..

வாக்கு திருட்டு நடந்ததால் தான் தோல்வி .. சொல்வது ராகுல் காந்தி அல்ல நெதன்யாகு...

எதிரிகள் மாறுவார்கள்.. திமுக நிலைச்சி நிக்கும்!.. கே.என்.நேரு பேட்டி...

அடுத்த கட்டுரையில்
Show comments