செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (13:11 IST)

300 கி.மீ வேகத்தில் பைக் பயணம் செய்த 25 வயது யூடியூபர் விபத்தில் பலி.. ஹெல்மெட் கேமிராவில் வீடியோ பதிவு..!

எக்ஸ்பிரஸ் சாலையில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் பயணம் செய்த 25 வயது யூடியூபர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 
 
பிரபல யூட்யூபர் அகஸ்தியா சௌகான் என்ற 25 வயது நபர் யூடியூபர் சுமார் 12 லட்சம் சப்ஸ்கிரைப்பர்களை வைத்து உள்ளார் என்பதும் இவர் அவ்வப்போது பைக் பயண வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஒவ்வொரு வீடியோக்களுக்கும் ஏராளமான பார்வையாளர்கள் வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் யூடியூபர் அகஸ்தியா எக்ஸ்பிரஸ் சாலையில் சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் ஓட்டியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அகஸ்தியா பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
அவர் 300 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கில் பயணம் செய்தது ஹெல்மெட் கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பைக்கில் அதிவேகமாக சென்று சாகசம் செய்ய வேண்டும் என்று நினைத்த 25 வயது யூடியூபர் தற்போது பரிதாபமாக உயிர் உள்ள இழந்துள்ளது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran