வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (10:28 IST)

கொரோனா வைரஸ் முகாமிலும் குத்தாட்டம் போடும் இந்தியர்கள் !

கொரோனா வைரஸ் பீதியால் சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது.

கொரோனா  வைரஸ் பீதி காரணமாக சீனாவில் இருந்த 600 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இரு தனி விமானங்களில் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு விமான நிலையத்தில்லேயே சோதனை செய்யப்பட்டது. அதில் சந்தேகத்துக்கு இடமான அறிகுறிகள் இருப்பவர்கள் மனசேரியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் குடும்பத்தினரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்ல. இந்த நிலையில் அவர்கள் தங்கள் முகாமில் இந்தி பாட்டு ஒன்றுக்கு சந்தோஷமாக நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு சமூகவலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பு வெளியாகியுள்ளது.