1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (16:00 IST)

150 சவரன் நகை, BMW கார் வரதட்சணை கேட்ட காதலன் குடும்பத்தினர்.. மணமகள் தற்கொலை

150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக காதலனின் குடும்பத்தினர் கேட்டதால் மனம் உடைந்த காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 கேரளாவை சேர்ந்த சகானா என்ற  மருத்துவர் தனது சக மருத்துவரான ரூவாயிஸ் காதலித்து வந்தார். இருவரது பெற்றோர்களும் திருமணம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில்  காதலன் பெற்றோர்கள் அதிக வரதட்சனை எதிர்பார்த்ததாக தெரிகிறது. 
 
குறிப்பாக 150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம் மற்றும் பிஎம்டபிள்யூ கார் வரதட்சணையாக கொடுத்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் திருமணம் நின்றுவிட்டது. இதனையடுத்து மனம் வருத்தம் அடைந்த சஹானா திடீரென தற்கொலை செய்து கொண்டார். 
 
இந்த நிலையில் சஹானா பெற்றோர்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் மணமகன் ரூவாயிஸ் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்த நிலையில் திருமணம் நின்று விட்டதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தான் சகானா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran