திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (16:32 IST)

பிச்சை எடுத்தவருக்கு சோறு ஊட்டிவிட்ட பெண்- வீடியோ

ரயில் நிலையம் ஒன்றில் பிச்சையெடுத்து கொண்டிருந்த உடல் ஊனமுற்ற நபருக்கு பெண் ஒருவர் உணவு ஊட்டி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகில் மனித தன்மையற்ற செயல்களை பார்த்து மனம் வெறுக்கும்போது மனித தன்மைக்கு உதாரணமான சில சம்பவங்களும் நடப்பது உண்டு. ரயில் நிலையம் ஒன்றில் கை,கால் இயலாத ஊனமுற்றவர் ஒருவர் பிச்சையெடுத்து கொண்டிருந்திருக்கிறார். அங்கே ரயிலுக்கு காத்திருந்த பெண் ஒருவர் அவரது இயலாமையை பார்த்து வருந்தினார். உடனே தான் கொண்டு வந்திருந்த உணவு டப்பாவிலிருந்து சாப்பாட்டை எடுத்து அவருக்கு ஊட்டிவிட ஆரம்பித்திருக்கிறார். அவரது இந்த மனிநேய செயலை கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

அதை வீடியோ எடுத்த சிலர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.