1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 19 ஜூலை 2017 (17:01 IST)

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்த காதலன்

உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை, காதலன் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் பகுதியில் கிணற்றில் சடலமாக கிடந்த பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், நொய்டா பகுதியில் டைலராக பணிபுரிந்து வந்த பெண்ணை அவரது காதலர் கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.
 
மேலும் அந்த பெண் காதலனிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் அவரது காதலன் அந்த பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.