1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 29 ஜனவரி 2017 (10:38 IST)

ஐ.ஏ.எஸ். என கூறி ஏமாற்றிய பெண்: 250 வழக்குகளில் தப்பிய பலே கில்லாடி!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதியப்பட்ட 250 வழக்குகளில் இளம்பெண் ஒருவர் தேடப்பட்டு வந்தவர், ஐ.ஏ.எஸ் அதிகாரி என பொய் சொல்லி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.


 
 
கைது செய்யப்பட்ட, குஷ்பு ஷர்மா ஒரு மாற்றுத்திறனாளி. சிறு வயதில் நடைபெற்ற ரயில் விபத்து ஒன்றில், தனது வலது கையை பறி கொடுத்துள்ளார். பின்னர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தி போலியாக பட்டப்படிப்பு சான்றிதழை பெற்றுள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி பலரை ஏமாற்றி பணம் பறித்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.
 
வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து 2 லட்ச ரூபாயை கையாடல் செய்ததாக, குஷ்பு ஷர்மா கைதுசெய்யப்பட்டார். அப்போதுதான் அவர் இது போன்ற 250 வழக்குகளில் தேடப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், மகராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.