பலாத்காரம் செய்து குடலை உருவி கொலை செய்யப்பட்ட தலித் மாணவி: கேரளாவில் அதிர்ச்சி


Bala| Last Updated: செவ்வாய், 3 மே 2016 (12:34 IST)
கேரளாவில் தலித் மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு குடலை உருவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ளது பெரும்பாவூர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஜிஷா(வயது 29). தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 28ம் தேதி வெளியே சென்றிருந்த ஷிஜாவின் தாய்  வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் ஜிஷா பிணமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஜிஷா உடலில் 30 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததும், அவரது குடலை கொலை செய்தவர்கள் உருவியுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில் கொலை செய்யப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்பட்டு குடலை உருவி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிக்குமாறு கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :