தற்கொலைக்கு முயன்ற பெண்.. ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாததால் பரிதாப பலி..!
தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஆம்புலன்ஸில் கொண்டு வந்த நிலையில், மருத்துவமனைக்கு வந்ததும் ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாததால் பரிதாபமாக அந்த பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை உறவினர்கள் மீது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில், மருத்துவமனைக்கு வந்ததும் ஆம்புலன்ஸ் கதவை திறக்க முயன்ற போது கதவை திறக்க முடியவில்லை. இதையடுத்து மேலும் சில ஊழியர்கள் முயற்சித்த நிலையில் கிட்டத்தட்ட 15 நிமிடம் தாமதம் ஆகிவிட்டது.
அதன் பின்னர் வேறு வழியில்லாததால், ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அந்த பெண் இறந்துவிட்டதாகவும், பத்து நிமிடத்திற்கு முன் அழைத்து வந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம், ஆம்புலன்ஸ் கதவை சரியாக பராமரிக்காததால் தான் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை அருகில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து உரிய விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran